சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது, வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “இறைவன் முன்பு அனைவரும் சமம்; இந்த அரசு அதற்காக செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் கனகசபையில் பக்தர்கள் வழிபடும் விவகாரம் இன்று நேற்றல்ல, 2,000 ஆண்டுகளாக நடக்கும் போராட்டம். தமிழ்நாட்டில் 18 பெண் ஓதுவார்கள் பணியில் உள்ளனர்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post இறைவன் முன்பு அனைவரும் சமம் : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.