இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி, இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் உள்ள ஆட்டங்களாகும். இதனிடையே இந்தத் தொடரில் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையுடன் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. பிப்ரவரி 12, 14-ம் தேதிகளில் இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.