ராமேஸ்வரம்: ங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தம் தொடரும் நிலையில், தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை தொடங்கினர். தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை சிறைப்பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மை காலமாக மீனவர்களை சிறைபிடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் மீனவர்கள் 131 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மேலும், 18 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ந்நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் பிப்.23ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து, பல கோடி ரூபாய் மதிப்பில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் முற்றிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.
உண்ணாவிரதம்
இந்நிலையில், இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே, தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கியது. மீனவ சங்க பிரதிநிதிகள் சகாயம், எமரிட், சம்சன் ஆகியோர் தலைமை வகிக்க, சங்க தலைவர் ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். இதில், இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையில் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். ராட்டத்தில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினர், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர். இது தவிர நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மீனவர்களின் போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.
The post இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.