ராமநாதபுரம்: இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமேஸ்வர மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக நாளை பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ளார். பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு மோடி சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்களை இரு தரப்பும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. இந்நிலையில், இலங்கை செல்லும் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு பிரதமரிடம் வலியுறுத்த கோரி ராமநாதபுரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக கடலோர பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், 100க்கும் மேற்பட்ட விசை படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது. எனவே படகுகள் மற்றும் சிறைபிடித்துள்ள மீனவர்களையும் விடுவிக்க பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு மீனவர்கள் கோரிக்கை: மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை! appeared first on Dinakaran.