இலங்கை ராணுவ வெற்றி விழாவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பேச்சு புலம்பெயர்ந்த தமிழர்களை சமாதானப்படுத்தும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இலங்கை இறுதிக்கட்ட போரில் “அதிகாரத்திற்காக ஒன்றுமே அறியாதோரின் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.