கும்பகோணம்: பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்வமணியின் இருசக்கர வாகனத்தை, மருத்துவக்குடி பாரதியார் நகரைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் வாங்கிச் சென்றுள்ளார். அதை அவர் மீண்டும் திருப்பித் தராததால், இருசக்கர வாகனத்தை வாங்கித் தரும்படி, அருண்ராஜிடம் செல்வமணி கூறியுள்ளார். அதன்படி, செல்வமணியின் இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி சிலம்பரசனிடம் அருண்ராஜ் கண்டித்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.