வாஷிங்டன்: வாஷிங்டனில் திங்கள்கிழமை நடந்த அதிபர் ட்ரம்பின் பதவியேற்பு பிரார்த்தனைக் கூட்டத்தில், வாஷிங்டனின் ஆயரான வலதுசாரி பிஷப் மரியன் எட்கர் பட்டே, "எல்ஜிபிடிக்யூ மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.
தனது 15 நிமிட பிரசங்கத்தில் மரியன் பட்டே கூறுகையில், "அதிபர் அவர்களே, இறுதியாக நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். லட்சக்கணக்கானோர் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நேற்று நீங்கள் நாட்டுக்குச் சொன்னது போல, அன்புமிக்க கடவுளின் தெய்வீக கரத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். நமது கடவுளின் பெயரால், தற்போது அச்சத்தில் உள்ள நமது நாட்டின் மக்கள் மீது இரக்கம் காட்டுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள், ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களில் உள்ள தன்பாலீர்ப்பாளர்கள், திருநங்கைகள். அவர்களில் சிலர் உயிரச்சத்தில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.