ஹமாஸ்: இஸ்ரேலைச் சேர்ந்த மேலும் 6 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது . இஸ்ரேலைச் சேர்ந்த 3 பிணைக்கைதிகளை ஏற்கனவே ஹமாஸ் விடுவித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது.
அடுத்தகட்டமாக ஹமாஸ் அமைப்பு தங்கள் பிடியில் உள்ள 4 பணயக் கைதிகளை விடுவிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தது. அதன்படி, அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் பட்டியலில், இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகியோா் இடம்பெற்றனா். இவர்கள் அனைவரும் முறைப்படி காஸா செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 6 பயணக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.
The post இஸ்ரேலைச் சேர்ந்த மேலும் 6 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு appeared first on Dinakaran.