வாஷிங்டன்: ஒப்பீட்டளவில் இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது என்றும், போரை நிறுத்துமாறு அந்நாட்டிடம் கோருவது இப்போதைக்கு கடினம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் போரை நிறுத்தினால், தானும் நிறுத்திக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா தெரிவிக்க முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.