டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
மருத்துவமனையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், 47 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தாக்குதல் இஸ்ரேல் அரசையும், மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.