இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது.