நாகர்கோவில்: “சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆவதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது” என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரிக்கு வந்த இஸ்ரோ தலைவர் நாராணன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள். ஒரு சமுதாயம், நாடு, குடும்பம் முன்னேற வேண்டும் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு சம உரிமை வேண்டும். ஆண், பெண் என பிரித்து பார்க்கவில்லை. தகுதியான மற்றும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு, முன்னுரிமை வழங்கப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநர் நிகார்சாஜ் ஒரு பெண் ஆவார்.