சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வி.நாராயணனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய ஆய்வு மையத்தின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி.நாராயணனை நியமித்தது பாராட்டுக்குரியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்விப் பயின்று இப்போது இஸ்ரோவின் தலைவராக உயர்ந்திருப்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.