சென்னை: இஸ்லாமியர்களை காக்கும் அரணாக திமுக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்; கலைஞர் முதலமைச்சராக இருந்த போது மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார், அதை அதிமுக அரசு ரத்து செய்தது. மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார் கலைஞர். வக்ஃபு வாரிய சொத்துகளை பராமரிக்க முதலில் மானியம் வழங்கியவர் கலைஞர்.
காயிதே மில்லத் மகளிர் இஸ்லாமியல்களுக்கு 3.5% உள்ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர். 1 முதல் 8ம் வகுப்பு வரை ‘இஸ்லாமிய மாணவிகளுக்கு 94 ரூ.1,000 கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியமாக ரூ.80 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கும் | பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம்தான். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு தலா ரூ.25,000 மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களை காக்கும் அரணாக திமுக செயல்பட்டு வருகிறது. சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். சி.ஏ.ஏ. சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிதான் அதிமுக. இஸ்லாமியர்களின் உரிமைகளை காக்கும் சகோதரர்களாக நாங்கள் செயல்படுகிறோம். இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி அவர்களின் காவல் அரணாக திமுக அரசு என்றும் இருக்கும். கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக ரூ.405 கோடி செலவிடப்பட்டுள்ளது. கிராமப்புறத்தைச் சேர்ந்த 76,663 இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4.82 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
The post இஸ்லாமியர்களை காக்கும் அரணாக திமுக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.