சென்னை: இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என சென்னை பெரம்பூரில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். “அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடையும் வளர்ச்சிக்கு அடித்தளமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றம், கூட்டுக்குழுவில் திமுக சார்பில் குரல் எழுப்பி வருகிறோம். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.