ஈராக்: கிழக்கு ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரில் உள்ள ஐந்து மாடி கட்டிட ஷாப்பிங் மால் இரவில் தீப்பிடித்து எரிந்தது, இதில் முதலில் ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் ஒரு உணவகத்தில் தீ பற்றியது. தீ விபத்து ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களில் பலர் மாலில் ஷாப்பிங் செய்தும், உணவருந்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய தீப்பிழம்புகள் தொலைதூரம் வரையில் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர்.
இத்தகைய தீவிபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக ஈராக்கின் பஸிட் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அதில் ஒரு உடல் மிகவும் மோசமாக எரிந்ததால் அதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் ஆரம்ப விசாரணை முடிவுகள் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஎன்ஏ தெரிவித்துள்ளது. ஐஎன்ஏ இன் படி, கட்டிடம் மற்றும் மாலின் உரிமையாளர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
The post ஈராக்கில் குட் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் பொதுமக்கள் 50 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.