புதுடெல்லி: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்துக்கு முழுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும், ஈரான் நினைத்தால் சில மாதங்களில் யுரேனியம் செறிவூட்டுவதை மீண்டும் தொடங்க முடியும் என்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி கூறினார்.
ஈரான் மீது ஜூன் 13-ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இரு தரப்பிலும் போர் தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஜூன் 21-ம் தேதி ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா விமானம் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் ஈரானின் அணுசக்தி திட்டம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.