தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தின.
அமெரிக்க போர் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசி ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணுசக்தி தளங்களை அழித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.