வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதன் மூலம், அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததன் மூலமும் ஈரானியர்கள் போரில் அவ்வளவு சிறந்தவர்கள் அல்ல என்பதை வெளிக் காட்டியுள்ளனர் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான 12 நாள் போர் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வர உள்ளது என்றும், போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்த நிலையில், அமெரிக்க செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜே.டி. வான்ஸ், போர் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.