வாஷிங்டன்: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இணைந்தால் ‘முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரானும் இஸ்ரேலும் 7-வது நாளாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துருக்கிக்கான தூதராகவும் பணியாற்றும் சிரியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் தாமஸ் பராக், பெய்ரூட்டில் லெபனான் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது ஹிஸ்புல்லாவின் நெருங்கிய கூட்டாளியான லெபனானின் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.