மஸ்கட்: ஈரானின் புதிய அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் ஓமனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாகித் ராஜேய் துறைமுகத்தில் நேற்று முன்தினம் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கன்டெய்னர்கள் வெடித்து சிதறி துறைமுகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
நேற்று காலை வரை கொழுந்து விட்டு எரிந்த தீயை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள்களை சேமித்து வைத்திருந்த கன்டெய்னர்கள் சரிவர பராமரிக்கப்படாததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
The post ஈரான் துறைமுக வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: 1000 பேர் காயம் appeared first on Dinakaran.