நியூயார்க்: அமெரிக்க கருவூலத்துறை நேற்று முன்தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘‘இந்தியரான ஜக்விந்தர் சிங் பிரார் பல கப்பல் நிறுவனங்களை வைத்திருக்கிறார். இந்த நிறுவனங்களில் சுமார் 30 கப்பல்கள் இயங்கி வருகின்றன. ஜக்விந்தர் ஐக்கிய அரபு எமிரேட்சை தளமாக கொண்ட வணிகங்களுக்கு கூடுதலாக இந்தியாவை தளமாக கொண்ட கப்பல் நிறுவனமான குளோபால் டேங்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெட்ரோ கெமிக்கல் விற்பனை நிறுவனமான பி அண்ட் பி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்.
ஜக்விந்தரின் கப்பல்கள் ஈராக், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் வளைகுடா கடல் பகுதியில் ஈரானின் பெட்ரோலியத்தை அதிக ஆபத்தான கப்பலில் இருந்து கப்பலுக்கு பரிமாறுவதில் ஈடுபட்டுள்ளன. பின்னர் இந்த சரக்குகள் மற்ற நாடுகளின் தயாரிப்புக்களுடன் எண்ணெய் அல்லது எரிபொருளை கலப்பதன் மூலம் மற்ற ஒருங்கிணைப்பாளர்களை சென்றடையும். ஈரானுடனான தொடர்புகளை மறைப்பதற்காக கப்பல் ஆவணங்களை பொய்யாக்கி இந்த சரக்கு கப்பல்கள் சர்வதேச சந்தையை அடைவதற்கு அனுமதிக்கிறது. இதன் காரணமாக ஜக்விந்தர் மற்றும் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
The post ஈரான் பெட்ரோலிய பொருட்களை கொண்டு சென்றதால் இந்தியர் மற்றும் 2 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை appeared first on Dinakaran.