சென்னை: ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜோலார்பேட்டையில் சிக்னல் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஈரோட்டில் இருந்து 06.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56108 ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில்,, 21.01.2025 மற்றும் 28.01.2025 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை இடையில் பகுதியளவில் ரத்து செய்யப்படும். ரயில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே ஓடும்.ஜோலார்பேட்டையில் இருந்து 14.45 மணிக்கு புறப்படும், ரயில் எண்.56107 ஜோலார்பேட்டை – ஈரோடு ரயில், , 21.01.2025 மற்றும் 28.01.2025 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் இடையில் பகுதியளவில் ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லாது என்றும் அறிவித்தது.
The post ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.