இந்தியா மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் அன்றைய காலகட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது தான் ‘நம்ப முடியாத நாட்குறிப்புகள்’ எனும் இத்தொடர். அந்த வகையில் என் நினைவில் இருந்தவை, குறித்து வைத்திருந்தவை, வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து முக்கியமான நிகழ்வுகளை செய்தித் துளிகள் போல் உங்களுடன் பகிர்ந்து வருகிறேன். இந்தத் தொடர் உருவாக மற்றொரு முக்கியமான காரணியாக விளங்குவது ஈழத் தமிழர் பிரச்சினை. இந்தக் கட்டுரைத் தொடர் வெளிவருவதற்கு உந்துதலாக இருந்ததும் ஈழத் தமிழர் பிரச்சினைதான் என்று சொன்னால் அது மிகையில்லை.
இனிவரும் தொடர்களில் ஈழத் தமிழர் பிரச்சினை, பிரபாகரன், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற பல்வேறு ஆயுதக் குழுக்களைப் பற்றி சொல்லப் போகின்றேன். அதற்கு ஒரு முன்னுரையாக… முகவுரையாக கீழே தரப்பட்டுள்ள கட்டுரை இருக்கும் என்று நம்புகிறேன். ‘துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில் ‘துரோகி’ மொழியாடலும்’ என்ற தலைப்பில் ‘அரங்கம் செய்திகள்’ என்ற இணையதளப் பக்கத்தில் வெளியான இந்தக் கட்டுரையை எழுதியவர் ராகவன் ஆவார்.