கீவ்: ரஷ்யாவில் உக்ரைன் வசமிருந்த மற்றொரு கிராமத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளதாக அறிவித்து உள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் சுமார் மூன்று ஆண்டுகளை கடந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் குர்ஷ்க் பிராந்தியத்தில் மற்றொரு கிராமத்தை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின்படி உக்ரைனின் எல்லையில் உள்ள ஓலேஷ்னியா கிராமத்தை உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டில் இருந்து ரஷ்யா மீட்டுள்ளது. உக்ரைன் வீரர்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் இல்லை.
The post உக்ரைனின் மற்றொரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா appeared first on Dinakaran.