கிவ்: உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
உக்ரைன் நாட்டில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவரது பதவி காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த தேவையில்லை. இதனிடையே உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ராஜினாமா செய்ய தயார் என ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார். ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
The post உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார்: அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு appeared first on Dinakaran.