வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயன்று வருகிறார். இதன் நிமித்தமாக அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.