உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் ட்ரம்ப் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டபிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி கொண்டார். ட்ரம்ப் விரைவாக அமைதியைக் கொண்டுவர விரும்புகிறார்.