ஐக்கிய நாடுகள் சபை: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பொதுச்சபையில் நேற்று 2 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த முதல் தீர்மானத்தில் ரஷ்யா தனது படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தில் 93 நாடுகள் ஆதரவாகவும் 18 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. அமெரிக்கா உட்பட 65 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதே சமயம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் ரஷ்யா மீது குற்றம்சாட்டப்படவில்லை. இதில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் 3 திருத்தத்தை வலியுறுத்தி, ரஷ்யாவை குற்றம்சாட்டின.
திருத்தத்துடன் இந்த தீர்மானம் 93-8 என்ற வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து திருத்தங்கள் இல்லாத அமெரிக்காவின் தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 10 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எதிர்த்து யாரும் வாக்களிக்கவில்லை. 5 ஐரோப்பிய நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியிருப்பதால் ஐரோப்பிய நாடுகளுடன் பிளவு ஏற்பட்டுள்ளது.
The post உக்ரைன் போர் விவகாரம் ஐநாவில் ரஷ்யாவை ஆதரித்த அமெரிக்கா appeared first on Dinakaran.