கீவ்: நேட்டோவில் இணையும் விவகாரத்தில் உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மூன்றாண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. டிரம்ப் அதிபரானதும், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், அமெரிக்க ராணுவத்தின் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான கீத் கெல்லாக் என்பவரை சிறப்பு தூதராக டிரம்ப் நியமித்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெல்லாக் நேற்று உக்ரைன் சென்றார். அங்கு தலைநகர் கீவ்வில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுகுறித்து கீத் கெல்லாக் கூறியதாவது, “போரை முடிவுக்கு கொண்டு வர நல்ல பேச்சுவார்த்தை நடத்த இதுஒரு நல்ல வாய்ப்பு ” என்று தெரிவித்தார்.
The post உக்ரைன் – ரஷ்யா போர் அமெரிக்க சிறப்பு தூதர் உக்ரைன் பயணம் appeared first on Dinakaran.