உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை என்றும் தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு துக்கமே மிஞ்சியது என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதிருந்தே தான் ஆட்சியில் இருந்திருந்தால் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டிருக்காது என்று ட்ரம்ப் கூறிவந்தார். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று சூளுரைத்தார்.