யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தத்துப் பித்து என்று உளறிக்கொட்டுவதிலும் அறிவற்ற ஆத்திரத்தையும் வசையையும் பொழிபவர் என்பதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட உதாரணங்கள் உள்ள நிலையில், தன் மகன் யுவராஜ் சிங், கபில் தேவை விட சிறந்த வீரர் என்று கபில்தேவுக்கே பேப்பர் கட்டிங்கை அனுப்பி தெரிவித்ததாக இப்போது தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு யோக்ராஜ் சிங், “கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே நேரத்தில் வடக்கு மண்டலம், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்தவித காரணமும் இல்லாமல் அணியில் இருந்து என்னை நீக்கினார். இதையடுத்து கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று எனது மனைவியிடம் கூறினேன். உடனடியாக என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கபில்தேவ் வீட்டுக்கு சென்றேன். அப்போது கபில், அவரது அம்மாவுடன் வெளியே வந்தார்.