அறிவிப்புகள் 2025-2026
1.முதலமைச்சரின் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ், ரூ.250 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* முதலமைச்சரின் பொன்னான திட்டங்களில் ஒன்றான ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ், சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், புறவழிச் சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ஆற்றுப் பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்படும்.
2.முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP)கீழ், நடப்பாண்டில் 220 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ. சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
* 2021-2022 ஆண்டு மானிய கோரிக்கையின்போது, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் 2,200 கி.மீ. முக்கிய சாலைகள் நான்குவழிச் சாலையாகவும், 6,700 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிச் சாலையாகவும் அடுத்த 10 ஆண்டுகளில் அகலப்படுத்தப்படும் என அறிவித்தார்.
* இத்திட்டத்தின்கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 831 கி.மீ. சாலைகளை நான்குவழிச் சாலையாகவும் மற்றும் 2,038 கி.மீ. நீளச்சாலைகள் இருவழிச் சாலையாகவும் மாற்றவும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 489 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நான்குவழிச் சாலையாகவும் 1,692 கி.மீ. நீளமுள்ள சாலைகள் இருவழிச் சாலைகளாகவும் அகலப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
* நடப்பாண்டில், விருத்தாச்சலம் – தொழுதூர் சாலை, கொடைரோடு – வத்தலகுண்டு சாலை, சிவகாசி – விருதுநகர் சாலை உள்ளிட்ட 220 கி.மீ. நீள சாலைகள் நான்கு வழிச் சாலைகளாகவும், 550 கி.மீ. நீள சாலைகள் இருவழிச் சாலைகளாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
3.முதலமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின்கீழ், 84 தரைப்பாலங்கள், உயர்மட்டப் பாலங்களாக ரூ.466 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை கையாளும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சரின் “அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்துத் திட்டம்” (Chief Minister All Season Uninterrupted Connectivity Scheme) என்ற முத்தாய்ப்பான திட்டத்தின்கீழ், நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் உயர்மட்டப் பாலங்களாக, 2026 ஆண்டிற்குள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
* கடந்த நான்கு நிதியாண்டுகளில், 1,197 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக கட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் பணிகள் எடுக்கப்பட்டு, 1,066 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
* இந்த நிதியாண்டில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நபார்டு கடனுதவி திட்டத்தின்கீழ், 84 தரைப்பாலங்கள் ரூ.466 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்படும்.
4.புறவழிச் சாலைகள்;
ஆத்தூர் நகர் மற்றும் ஓசூர் மாநகருக்குப் புறவழிச் சாலைகள் ரூ.550 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சேலம் மாவட்டம்,
ஆத்தூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, ரூ.180கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
* கிருஷ்ணகிரி மாவட்டம்,
தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர் மாநகரில் ஏற்படும் கனரக வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்தில் ரூ.370 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
5.இணைப்புச் சாலைகள்;
தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி, இராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் முட்டம் பாலம் ஆகிய மூன்று இணைப்புச் சாலைகள் ரூ.230 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* தூத்துக்குடியையும் – வாஞ்சி மணியாச்சி இரயில்வே நிலையச்சந்திப்பையும் இணைக்கும் வகையில் புதிய இணைப்புச் சாலை (கட்டம்-1) ரூ.200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு இணைப்புச் சாலை ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* கடலூர் மாவட்டம், முட்டம் பாலத்திற்கு இணைப்புச் சாலை ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
6.உயர் மட்ட பாலங்கள் (HLB):
ஆறுகளின் குறுக்காக தங்குத்தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய 6 உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.
* இராணிப்பேட்டையில் விருத்தகசீரக ஆற்றின் குறுக்கே (தண்டலம் – பேரம்பாக்கம் – தக்கோலம் -அருகில்பாடி சாலையில்) பாலம்.
* தஞ்சாவூரில் வெண்ணாற்றின் குறுக்கே (திருக்காட்டுப்பள்ளி – செங்கிப்பட்டி – பட்டுக்கோட்டை சாலையில்) பாலம்
* திருச்சியில் கோரையாற்றின் குறுக்கே (திருச்சி – மேலூர் – மதுரை சாலையில்) பாலம்.
* ஆத்துப் பொள்ளாச்சியில் ஆழியாற்றின் குறுக்கே (ஆத்துப் பொள்ளாச்சி – காளியப்பன் கவுண்டன் புதூர் சாலையில்) பாலம்.
* செவிலிமேட்டில் பாலாற்றின் குறுக்கே (காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில்) பாலம்.
* திருக்கோவிலூர் அரங்கண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம்.
* ஆகிய 6 உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.
7.இரயில்வே திட்ட பணிகள்:இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 இரயில்வே மேம்பாலங்கள் / ஒரு கீழ்பாலம் ரூ.787 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இரயில்வே மேம்பாலங்கள்;
* மதுரையில் பழங்காநத்தம் அருகில், இரயில்வே கடவு எண்.4A,
* நாகர்கோயில் மாவட்டத்தில் காவல்கிணறு – இராதாபுரம் சாலையில் இரயில்வே கடவு எண்.74B
* விருதுநகர் மாவாட்டம், திருத்தங்கலில் இரயில்வே கடவு எண் 424,
* திண்டுக்கல் மாவட்டத்தில், பழனியில் இரயில்வே கடவு எண்.63,
* திருவண்ணாமலையில் ரயில்வே கடவு எண்.56,
* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இரயில்வே மேம்பாலம்
* சென்னை, அம்பத்தூரில் உள்ள இரயில்வே மேம்பாலத்தினை அகலப்படுத்துதல்.
* மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு எண்.45
* செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயிலில் உள்ள கடவு எண்.49,
* மேல்மருவத்தூர் அருகில் உள்ள இரயில்வே கடவு எண்.74.
இரயில்வே கீழ்பாலம்:
* சேலம் – கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் (RUB/528) இரயில்வே கீழ்பாலம்
* ஆகிய 10 இடங்களில் இரயில்வே மேம்பாலங்களும், ஒரு இடத்தில் இரயில்வே கீழ்பாலமும் ரூ.787 கோடி மதிப்பீட்டில் இரயில்வே திட்டப் பணிகளின் (RWP) மூலம் கட்டப்படும்.
8.கடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வழியாக கஸ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்.
* கடலூர் புறநகர் பகுதியில் உள்ள கிராமங்களை கடலூர், புதுச்சேரி, பண்ருட்டி போன்ற நகரப் பகுதிகளுடன் இணைக்கவும் நகரப் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கடலூர் கஸ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்.
9.நடை மேம்பாலம் அமைத்தல்;திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அருகே நடை மேம்பாலம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* திண்டுக்கல் நகரில், திருச்சி சாலையில் அரசு மருத்துவமனை மற்றும் பூ மார்க்கெட் பகுதியில், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் ரூ.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
10.கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 1,000 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்ட சாலைகளாக (ODR) தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
* கடந்த நான்கு ஆண்டுகளில் 3,974 கி.மீ. நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.
* இந்தாண்டு, மேலும் 1,000 கி.மீ. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் இதர மாவட்டச் சாலைகளாக ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
11.கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் வெள்ளிமலை – சின்னதிருப்பதி ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலையாக ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் பின்தங்கிய பகுதியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வெள்ளிமலை – சின்னதிருப்பதி சாலை கி.மீ. 0/0-32/740 வரையுள்ள ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலையாக ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
12.சுற்றுலா மேம்பாடு; திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் சுற்றுலா மேம்பாட்டிற்காக 10 கி.மீ. நீள சுற்றுச் சாலை ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும் சுற்றுலா பயணிகளின் வசதியான போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக 10 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகளை, இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
13.நில எடுப்புப் பணிகள் (புறவழிச் சாலைகள் / இணைப்புச் சாலைகள்)நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆறு புறவழிச்சாலைகள் மற்றும் நான்கு இணைப்புச் சாலைகள் அமைக்க ரூ.285 கோடி மதிப்பீட்டில் நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* இராணிபேட்டை மாவட்டத்தில், சோளிங்கர் புறவழிச்சாலை
* ஈரோடு மாவட்டத்தில், சென்னிமலை புறவழிச்சாலை,
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (கட்டம்-1) புறவழிச்சாலை
* நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேளாங்கண்ணி புறவழிச்சாலை
* விழுப்புரம் மாவட்டத்தில், அவலூர் பேட்டை புறவழிச்சாலை
* திருவாரூர் மாவட்டத்தில், கூத்தாநல்லூர் புறவழிச்சாலை,
மேற்கூறிய ஆறு நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும்.
* நாகப்பட்டினம் மாவட்டத்தில், மீனவர்கள் வசதிக்காக அக்கரைப் பேட்டை முதல் கிழக்குக் கடற்கரைச் சாலையை இணைக்கும் சாலை.
* தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பாலக்கரை சந்திப்பில் இருந்து காவேரி ஆற்றின் வடகரை வழியாக பூம்புகார் செல்ல இணைப்புச் சாலை.
* திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை புறவழிச் சாலையில் இருந்து நேருஜி சிறுவர் கலையரங்கம் வரை இணைப்பு சாலை
* கரூர் மாவட்டத்தில், மேலப்பாளையம் – கோயம்பள்ளி சாலையில் அமராவதி ஆற்றுப் பாலத்திற்கு இணைப்பு சாலை.
ஆகிய 4 இணைப்புச் சாலைகள் அமைப்பதற்கு நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேற்கூறிய 6 புறவழிச்சாலைகள் மற்றும் 4 இணைப்புச் சாலைகள் அமைக்க தேவையான நில எடுப்புப் பணிகள் ரூ.285 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
14.காலதாமதமின்றி பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 2 இரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு ரூ.11.85 கோடி மதிப்பீட்டில் நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் ஓச்சேரி சாலையில் இரயில்வே கடவு எண் 49Dக்கு மாற்றாக இரயில்வே மேம்பாலம்.
* ஈரோடு மாவட்டம், பாசூர் ஆர்.எஸ். – வெள்ளோடு சாலையில், இரயில்வே கடவு எண்.16க்கு மாற்றாக ஆகிய இரண்டு இரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு நிலஎடுப்புப் பணிகள் ரூ.11.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
15.விரிவான திட்ட அறிக்கை;
நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 15 புறவழிச்சாலைகள் / இணைப்புச் சாலை / சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
* விருதுநகர் புறவழிச்சாலை
* இராஜபாளையம் நகருக்குப் புறவழிச்சாலை (கிழக்குப் பகுதி)
* கடலூர் மாவட்டம், புவனகிரியில் புறவழிச்சாலை,
* திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் புறவழிச்சாலை,
* திருநெல்வேலி மாவட்டம், களக்காடுக்குப் புறவழிச்சாலை,
* திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு நகருக்குப் புறவழிச்சாலை,
* தஞ்சாவூர் மாவட்டத்தில், நாச்சியார் கோவிலுக்குப் புறவழிச்சாலை.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆலத்தூர், சங்கராபுரம், குளத்தூர், வடபொன்பரப்பி ஆகிய பகுதிகளில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பொருட்டு புறவழிச்சாலை
இணைப்புச் சாலை;
* நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு – ஈரோடு சாலையில் தோக்கவாடி முதல் சங்ககிரி சாலையில் பாலமடை வரை இணைப்புச் சாலை
* இராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு புறவழிச் சாலையை இணைக்க இணைப்புச் சாலை.
சாலை மேம்பாலம்:
* ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் கள்ளிமந்தையம் மற்றும் அப்பியம்பட்டி சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.
ஆகிய 15 புறவழிச்சாலைகள்/ இணைப்புச் சாலை / சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
16.சுற்றுலா தலமான ஏற்காடு மலைக்கும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்கும் மாற்றுப்பாதைகள் அமைக்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்பான பயணத்திற்காகவும் ஏற்காடு மலைக்கு மாற்றுப்பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
17.திருப்பூர் மாநகருக்குப் புறவழிச்சாலை அமைக்கவும், தூத்துக்குடி நகரில் இணைப்புச் சாலை அமைக்கவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
* முதலமைச்சர் அவர்களின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற திருப்பூர் மாநகருக்குப் புறவழிச்சாலை
* தூத்துக்குடி நகரில் விமான நிலையத்தையும், மதுரை சாலையையும் இணைக்கும் வகையிலும் இணைப்புச் சாலை
ஆகிய 2 பணிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்படும்.
18.எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரையிலான கடல்வழி இணைப்புப் பாலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் இணைப்புச் சாலை அமைக்க, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் ரூ.4 கோடி மதிப்பீட்டில், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
* சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை கடல்வழியாக இணைக்கும் வகையில் பாலம் அமைக்கவும்,
* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் நகருக்கு ஈரோடு சாலையையும், ஊட்டி சாலையையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்கவும்,
ஆகிய 2 பணிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
19.சென்னை பெருநகர பகுதியில், உயர்மட்ட பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்க ரூ.258 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* பெருங்களத்தூர் முதல் மாடம்பாக்கம் சந்திப்பில் இணைக்கும் வகையில் தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலையின் தொடர்ச்சியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே ரூ.233 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
* ராஜ கீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம்தென் வழியாக பெருங்களத்தூர் மார்க்கத்தில் 1400மீ நீளத்திற்கு தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
20.சென்னை பெருநகர பகுதியில், பாடி அருகே “U’’ வடிவ சேவை சாலையும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர்-கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுப்படுத்த ரூ.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* வில்லிவாக்கம் இரயில்வே மேம்பாலத்தின் அடியில் கொரட்டூர் மற்றும் பாடி மார்க்கமாக செல்ல ”U” வடிவ சேவைச் சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) திருவான்மியூர் முதல் கொட்டிவாக்கம் வரை ஆறு வழிச்சாலையாக ரூ.81 கோடிமதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்.
The post “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ், ரூ.250 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.