கரூர்: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்திருப்பது குடியரசு துணை தலைவர் பொறுப்புக்கு ஏற்றதல்ல என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கைவினை திட்டத்தை இன்று (ஏப். 19ம் தேதி) தொடங்கி வைத்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.