உண்மைச் சம்பவப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘சாட்சி பெருமாள்’. மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசை அமைத்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.வினு கூறும்போது, “பத்திரப் பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரின் கதைதான் இது. அவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படித் தீர்க்கிறார் என்று கதை செல்லும். என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பாதிப்பில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன்.