*வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை
ஓசூர் : உத்தனப்பள்ளி அருகே, மக்காசே்சோளம், மிளகாய் செடிகளை யானைகள் நாசப்படுத்தியதால், விவசாயிகள் கவலையடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதிக்கு, ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 5 யானைகள் வந்து முகாமிட்டுள்ளன.
இதே பகுதியில் ஒற்றை யானை ஒன்றும் சுற்றி வருகிறது. தற்போது இந்த 6 யானைகளும் பகல் நேரத்தில் வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு, உத்தனப்பள்ளி அருகேயுள்ள துப்புகானப்பள்ளிக்கு வந்த யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சோளப்பயிர், கேரட், கத்தரி, மிளகாய் செடிகளை நாசம் செய்தது. பின்னர், நேற்று காலை வழக்கம் போல் வனப்பகுதிக்கு சென்றுவிட்டன.
காலையில் விவசாய நிலங்களுக்கு வந்த விவசாயிகள், பயிர்கள் நாசமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 6 யானைகளையும், வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உத்தனப்பள்ளி அருகே சோளப்பயிர், மிளகாயை நாசம் செய்த யானைகள் appeared first on Dinakaran.