டேராடூன்: உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி நீடிக்கிறது. இதற்கிடையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று முன்தினம் காலை 5.30 மணி முதல் 6 மணி வரை கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) முகாம் புதையுண்டதில் அதில் தங்கியிருந்த 55 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.