டெல்லி கலவர சதி வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இருப்பினும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேருக்கு, அதாவது குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

