மேட்டூர்: இளநிலை, முதுநிலை மற்றும் உயர் கல்வி படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் காவல் துறையில் சேர்ந்து வருகிறார்கள் என்று சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநரும் (பயிற்சி), டிஜிபியுமான சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ம் நிலை காவலர்கள் தேர்வில் 2,665 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 8 பயிற்சி பள்ளிகளில் நாளை (4-ம் தேதி) முதல் பயிற்சி வழங்கப்பட்டவுள்ளது. இதனையொட்டி, சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் 422 ஆண் காவலர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.