சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.லிங்கேஸ்வரன் உள்பட 4 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரான மாவட்ட நீதிபதி வி.ஆர்.லதா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அங்கு தலைமை நீதிபதியாக இருந்த டி.லிங்கேஸ்வரன், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிக்கும் சொத்தாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.