‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்ற பெயரில் உருவாகிறது ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2-ம் பாகம்.
2002-ம் ஆண்டு முரளி, வடிவேலு இணைப்பில் வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. இதன் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்று, படமும் வெற்றியடைந்தது. தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு.