அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜேபி இயக்கத்தில் உருவாகும் படம், ‘நிறம் மாறும் உலகில்’. இதில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளனர். தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
“நான்கு விதமான வாழ்க்கை, 4 கதைகள், அதை இணைக்கும் ஒரு புள்ளி என நம் வாழ்வில், உறவுகளின் அவசியத்தை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் படமாக இது உருவாகி இருக்கிறது. மும்பை, வேளாங்கண்ணி, சென்னை, திருத்தணி என நான்கு வெவ்வேறு களங்களில் கதை நடைபெறுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன” என்றது படக்குழு.