சென்னை: தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப் பணி வல்லுநரும் ஆவார் ஆர்.பாலகிருஷ்ணன் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி பண்பாட்டு தரவுகளை சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டு அகழாய்வு தரவுகளோடு ஒப்பிட்டு நூல் எழுதி உள்ளார்.
The post உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம் appeared first on Dinakaran.