புதுடெல்லி: "உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் சக்தியாக இந்தியா உள்ளது. அதேநேரத்தில், இதில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன" என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 'கவுடல்யா பொருளாதார மாநாடு 2025'-ல் கலந்து கொண்டு 'கொந்தளிப்பான காலத்தில் செழிப்பைத் தேடுதல்' என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக இந்தியா திகழ்கிறது. அதேநேரத்தில், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன.