டெல்லி: சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 10-வது இடத்தில் உள்ள நிலையில் இந்தியா முதல் 10 இடங்களில் இல்லை. பொருளாதார திறன், ராணுவ வலிமை, உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான கூட்டணி, அரசியல், ராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மிகவும் சக்திவாய்ந்த டாப் 10 நாடுகள் பட்டியல் விவரம் பின்வருமாறு:
1. 34.5 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவின் பொருளாதாரம் 30.34 டிரில்லியன் டாலராக உள்ளது.
2. 141.9 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவின் பொருளாதாரம் 19.53 டிரில்லியன் டாலராக உள்ளது.
3. 14.4 கோடி மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவின் ஜிடிபி 2.2 டிரில்லியன் டாலராக உள்ளது.
4. 6.91 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவின் பொருளாதாரம் 3.73 டிரில்லியன் டாலராக உள்ளது.
5. 8.45 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியின் பொருளாதாரம் 4.92 டிரில்லியன் டாலராக உள்ளது.
6. 5.17 கோடி மக்கள் தொகை கொண்ட தெற்கு கொரியாவின் பொருளாதாரம் 1.95 டிரில்லியன் டாலராக உள்ளது.
7. 6.65 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்சின் பொருளாதாரம் 3.28 டிரில்லியன் டாலராக உள்ளது.
8. 12.37 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானின் பொருளாதாரம் 4.39 டிரில்லியன் டாலராக உள்ளது.
9. 3.39 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவின் பொருளாதாரம் 1.14 டிரில்லியன் டாலராக உள்ளது.
10. 93.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலின் பொருளாதாரம் 550.91 பில்லியன் டாலராக உள்ளது.
The post உலகின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம், சீனா 2ம் இடம் : இந்தியாவுக்கு 12வது இடம்!! appeared first on Dinakaran.