வாஷிங்டன்: உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார். கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லாஸ் வேகாஸில் இன்று நடைபெற்ற 4வது சுற்றில் நம்பர் 1 வீரரான மார்க்ஸ் கார்ல்சன் , பிரக்ஞானந்தா ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார். கருப்பு நிற காய்களுடன் கார்ல்சன் விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். மொத்தம் 7 சுற்றுகள் கொண்ட போட்டியில் 4வது சுற்று போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ப்ரீஸ்டைல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியதன் மூலம் ரேபிட் செஸ் தொடரில் இறுதி சுற்றுக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.
The post உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா..!! appeared first on Dinakaran.