புதுடெல்லி: உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
12-வது சர்வதேச சுகாதார உரையாடல் மாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலகின் பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை வழங்கியது. 'தடுப்பூசி மைத்ரி' எனும் அந்த திட்டத்தின் மூலம் ஏராளமான வளரும் நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றன. பல வளர்ந்த நாடுகள் தங்கள் மக்கள்தொகையைவிட பல மடங்கு தடுப்பூசிகளை சேமித்து வைத்திருந்த நிலையில், அதற்கு எதிராக இந்தியா செயல்பட்டது.