பெய்ஜிங் : இணைய பயன்பாட்டை பொறுத்தமட்டில், அதன் வேகம் முக்கியமான ஒன்று. ஆரம்பத்தில் 2ஜியில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என்று அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, உலகின் முதல் 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுத்தவரை சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அவ்வப்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது .இந்த சேவை மூலம் மின்னல் வேகத்தில் இணையதள வசதி பெறமுடியும். 10 ஜி இணையதள சேவை மூலம் 3 மில்லி நொடிகளில் 9834 எம்பிபிஎஸ் வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும் என்றும் 1,008 எம்.பி.பி.எஸ். வேகத்தில் அப்லோடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஜி இணைய சேவையை அந்நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
The post உலகின் முதல் 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியது சீனா :3 மில்லி நொடிகளில் 9,834 எம்.பி.பி.எஸ் வேகத்தில் டவுன்லோடு செய்யலாம்!! appeared first on Dinakaran.