சென்னை: உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அயலகத் தமிழர் தின கண்காட்சி மற்றும் விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; அயலகத் தமிழர் நல வாரியத்தில் 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அயலத் தமிழர் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அயலகத் தமிழர் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக உழைக்கும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்று கூறினார்.
The post உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.