உலகளவில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல் 100 கோடியை கடந்திருக்கிறது.
ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெறத் தொடங்கியிருக்கிறது. இதனால் படத்தின் வசூல் குறைவின்றி இருக்கிறது. இதனிடையே, உலகளவில் 2 நாட்களில் 100 கோடியை கடந்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’ வசூல். இது அஜித்தின் திரையுலக வாழ்வில், 2 நாட்களில் 100 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.